உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் கோவில்களில் குறைகளை நிவர்த்தி செய்யும் முகாம்

Published On 2023-09-27 12:14 IST   |   Update On 2023-09-27 12:14:00 IST
  • அறங்காவலர்குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மனுக்கள் பெற்றார்
  • குமரிமாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் 490 கோவில்கள் உள்ளன.

நாகர்கோவில் :

குமரிமாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் 490 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் அனைத்தும் நாகர்கோவில், பத்மநாபபுரம், பூதப்பாண்டி, குழித்துறை மற்றும் செங்கோட்டை ஆகிய 5 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் 5 தொகு திகளுக்குட்பட்ட கோவில்களில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் குறை தீர்க்கும் முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் குறை தீர்க்கும் முகாம் நாகர்கோவில் தொகுதிக்கு உட்பட்ட நாகராஜா கோவிலில் உள்ள கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமுக்கு அறங்காவலர்குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி மனுக்களை பெற்றுக் கொண்டார். இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார்.

முகாமில், கும்பாபிஷேகம் நடக்காத கோவில்களில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், கோவில் திருப்பணிகளை உபய தாரர்கள் மூலம் செய்ய அனுமதி பெற்று தர வேண்டும். வேலைவாய்ப்பு, கோவில் திருவிழாக்களில் சமய சொற்பொழிவு மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடத்த அனுமதி வாங்குவது, ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவில்களில் மராமத்து பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மனுக்கள் அளிக்கப் பட்டன. முகாமில் அறங்காவலர்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், துளசிதரன் நாயர், சுந்தரி, கோவில் ஸ்ரீகாரியங்கள், மேலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News