உள்ளூர் செய்திகள்

தக்கலையில் தொழிற்சங்கத்தினர் மறியல்; 300 பேர் கைது

Update: 2022-08-10 08:44 GMT
  • 2019 டிசம்பர் முதல் 2022 நவம்பர் முடிய உள்ள காலத்திற்கு ஊதிய உயர்வுக்கு தீர்வு ஏற்படாமல் இருந்தது.
  • அனைத்து சங்க தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று காலை கல்குளம் தாலுகா அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி :

தமிழ்நாடு அரசின் வனத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு ரப்பர் கழகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 2016 முதல் 2019 வரை இடைக்கால ஊதியம் உயர்வு மட்டுமே வழங்கப்பட்டது.

ஆனால் ஊதிய உயர்வு உட்பட இறுதிப் படுத்தி உடன்பாடு கோரிக்கை தேர்வு ஏற்படவில்லை. இது நிலுவையில் உள்ள போது 2019 டிசம்பர் முதல் 2022 நவம்பர் முடிய உள்ள காலத்திற்கு ஊதிய உயர்வுக்கு தீர்வு ஏற்படாமல் இருந்தது.

இந்நிலையில் அமைச்சர் முன்னிலையில் நாகர்கோவி லில் வைத்து டிசம்பர் மாதம் 2020 ஒன்றில் பேசி முடிக்கப்பட்டது. பத்து நாட்களில் உடன்பாடு செய்யவும் நிர்வாகம் ஒப்புக்கொண்டது. ஆனால் 7 மாதங்களாகியும் இதுவரை தீர்வு ஏற்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் மிகவும் கவலையில் உள்ளனர். அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முன்பு பேசியும் தீர்வு ஏற்படாத நிலையில் கன்னியாகுமாரி மாவட்ட அனைத்து சங்க தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று காலை கல்குளம் தாலுகா அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மறியலில் சிஐடியு மாவட்ட செயலாளர் வல்ச லகுமார், காங்கிரஸ் பால்ராஜ், அ.தி.மு.க. மகேந்திரன், ம.தி.மு.க. பால்ராஜ், பிஎம்எஸ் சார்பில் ரவிக்குமார், தொமுச சார்பில் நடராஜன் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News