உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை சூடு பிடிக்கிறது - கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்

Published On 2023-01-12 06:59 GMT   |   Update On 2023-01-12 06:59 GMT
  • அப்டா மார்க்கெட் மற்றும் வடசேரி மார்க்கெட் பகுதிகளில் கரும்புகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு உள்ளது. கரும்பு ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • நாகர்கோவில் நகரில் மட்டுமின்றி களியக்கா விளை, மார்த்தாண்டம், குழித்துறை, இரணியல், கன்னியாகுமரி, அஞ்சு கிராமம் பகுதியில் உள்ள கடைவீதிகளிலும் பொங்கல் பண்டிகையொட்டி புத்தாடைகள் எடுப்பதற்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

நாகர்கோவில்:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15 ந்தேதி கொண்டா டப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட அனைத்து தரப்பினரும் தயாராகி வருகிறார்கள்.புதுமண தம்பதியினருக்கு பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள், கிழங்கு, புத்தாடைகள் என சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. நாகர்கோவிலை பொறுத்த மட்டில் கோட்டாறு மார்க்கெட்டில் பொங்கல் விடுவதற்கு தயாராக பானைகள் வாங்குவதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். விதவிதமான பானைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.இதை பொதுமக்கள் தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

சுங்கான் கடை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண் பானைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. கரும்பு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அப்டா மார்க்கெட் மற்றும் வடசேரி மார்க்கெட் பகுதிகளில் கரும்புகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு உள்ளது. கரும்பு ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் ஆர்வ மாக வந்து கரும்பை வாங்கி செல்கிறார்கள். பொங்கல் சீர் வரிசை கொடுக்க பொதுமக்கள் கட்டு கட்டாக கரும்பை வாங்கி செல்கின்ற னர். மஞ்சள்குலை விற்ப னைக்கு குவித்து வைக்கப் பட்டுள்ளது. வடசேரி பகுதி யில் சாலை ஓரங்களில் மஞ்சள் குலைகள் விற்ப னைக்கு அதிக அளவு வைத்திருந்தனர். கிழங்கு வகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் புத்தாடைகள் எடுப்பதற்கும் பொதுமக்கள் கடை வீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். இத னால் செம்மங்குடி ரோடு, மீனாட்சிபுரம் கலெக்டர் அலுவலகம் சந்திப்பு, மணிமேடை பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது.

நாகர்கோவில் நகரில் மட்டுமின்றி களியக்கா விளை, மார்த்தாண்டம், குழித்துறை, இரணியல், கன்னியாகுமரி, அஞ்சு கிராமம் பகுதியில் உள்ள கடைவீதிகளிலும் பொங்கல் பண்டிகையொட்டி புத்தாடைகள் எடுப்பதற்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

மேலும் கரும்பு விற்பனையும் களைகட்டி உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து கரும்புகள் விற்ப னைக்காக லாரிகளில் கொண்டு அடுக்கி வைக்கப் பட்டு உள்ளது. பொது மக்கள் அதை ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள்.

Tags:    

Similar News