உள்ளூர் செய்திகள்

ராஜாக்கமங்கலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடிய கொள்ளையன் கைது

Published On 2023-08-12 07:24 GMT   |   Update On 2023-08-12 07:24 GMT
  • சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
  • சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி :

ராஜாக்கமங்கலம் அருகே கன்னக்குறிச்சி நடுவூரில் ஈஸ்வரி பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப் பட்டிருந்தது.

இதுகுறித்து கோவில் தலைவர் ஸ்ரீதர் சிதம்பர நாதன் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது வாலிபர் ஒருவர் உண்டி யலை உடைத்து பணத்தை எடுத்து செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சி.சி.டி.வி. காமிரா வில் பதிவாகி இருந்தது ஆலங் கோட்டை யை சேர்ந்த மகேஷ் (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மகேஷை தேடி வந்தனர். போலீசார் தேடுவது அறிந்த அவர் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் ராஜாக்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் பதுங்கி இருந்த மகேசை சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

பறக்கை அருகே புல்லுவிளை முத்தாரம்மன் கோவிலில் கதவை உடைத்து தங்க நகைகள், வெண்கல குத்துவிளக்குகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஈத்தாமொழி தெற்கு சூரங்குடி கீரிவிளையை சேர்ந்த அரவிந்த் பிரியன் (21) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப் பட்டவ ரிடம் இருந்து 4 குத்து விளக்குகள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப் பட்டது. கைது செய்யப்பட்ட அரவிந்த் பிரியன் மீது ராஜாக்கமங்கலம், வெள்ளிச் சந்தை பகுதி களில் கோவில் களில் கொள்ளை சம்பவங்க ளில் ஈடுபட்ட வழக்கு உட்பட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

ஈத்தாமொழி போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட அரவிந்த் பிரியனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News