மணிப்பூர் படுகொலையை கண்டித்து கருங்கலில் பேரணி - ஆர்ப்பாட்டம்
- எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ் - ராஜேஷ்குமார் பங்கேற்பு
- மத இன மொழி பண்பாட்டு உரிமைகளை பாதிக்கும் பொது சிவில் சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்
கன்னியாகுமரி :
மணிப்பூர் படுகொலை களை கண்டித்தும், மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை எதிர்த்தும் மாத்திரவிளை வட்டார அரசியல் பிரிவு மற்றும் சிறுபான்மை அமைப்புகள் சார்பில் கருங்கலில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கருங்கல் கருமாவிளை சந்திப்பில் தொடங்கிய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ததேயு பிரேம்குமார் தலைமை தாங்கினார். பேரணியை பிரின்ஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
பேரணி கருமாவிளை, நியூ ஜங்சன், போலீஸ் நிலையம், ராஜீவ்காந்தி சிலை சந்திப்பு வழியாக கருங்கல் தபால் நிலையம் வந்தடைந்தது.
தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தை மாத்திரவிளை மறைவட்ட முதல்வர் மரிய வின்சென்ட் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் சுவாமித்தோப்பு பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளார், குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் இயேசு ரெத்தினம், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், சூசைபுரம் அல்போன்சா கல்லூரி தாளாளர் ஆன்றனி ஜோஸ், பரமானந்தபுரம் சி.எஸ்.ஐ. போதகர் ஐசக் மெரின் சிங், பாலூர் ஊராட்சி தலைவர் டாக்டர் அஜித்குமார், குமரி மாவட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பு தலைவர் போதகர் ஞானதாசன், பொதுச்செயலாளர் மீரான் மைதீன், மாத்திரவிளை வட்டார அரசியல் குழு தலைவர் வக்கீல் ஸ்டான்லி காஸ்மிக் சுந்தர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிகழ்ச்சியை கில்பர்ட் லிங்சன் ஒருங்கிணைத்தார்.
பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆஸ்கர் பிரடி, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணிபாய், வர்த்தகர் சங்க தலைவர் கருங்கல் ஜார்ஜ் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
போராட்ட முடிவில் மத இன மொழி பண்பாட்டு உரிமைகளை பாதிக்கும் பொது சிவில் சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.