உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-31 09:18 GMT   |   Update On 2023-07-31 09:18 GMT
  • பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
  • போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கன்னியாகுமரி :

இரணியல் அருகே நெய்யூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பரம்பை கண்ணோடு கொக்கோட்டிலிருந்து, சரல்விளை, பாளையம், பழவண்டான்கோணம் ஆகிய ஊர்கள் செல்ல ெரயில் வழித்தடத்தில் மேம்பாலம் அமைத்து தரும்படி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நெய்யூர் பேரூராட்சி தலைவர் பிரதீபா, கவுன்சிலர்கள் ராஜகலா, ஹரிதாஸ், வக்கீல் ஜெகன் ஆகியோர் தலைமையில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனையடுத்து இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன், குழித்துறை ெரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இஜி மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News