உள்ளூர் செய்திகள்

உண்ணாமலைகடையில் கோவிலில் திருவிழா நடத்த எதிர்ப்பு - போலீஸ் குவிப்பு

Published On 2023-08-13 08:45 GMT   |   Update On 2023-08-13 08:45 GMT
  • திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்த கும்பல் ஒலிபெருக்கி வைக்கவிடாமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
  • பதட்டம் ஏற்படாமல் இருக்க அதிரடிப்படைகள் குவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி :

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலை கடையில் பெரும்புழி ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி ஆலயம் உள்ளது. இங்கு வருடாந்திர மண்டல அபிஷேகம் மற்றும் கொடை விழா நடந்தது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் திடீரென ஆலயத்தில் புகுந்து திருவிழா நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் ஆலய நிர்வாகி களுக்கு மிரட்டல் விடுத்த தால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்து முன்னணி மாநில நிர்வாகி மிசா சோமன் தலைமையில், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட இணை செயலாளர் சுபாஷ் குமார், பூசாரிகள் பேரமைப்பு மாவட்ட செயலாளர் சசிகுமார், உண்ணாமலை கடை துணை தலைவர் விஜய குமார் உட்பட ஏராளமான இந்து அமைப்பினர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரப ரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து மார்த்தாண் டம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலையை தடுக்க அதிரடி படையினரும் குவிக்கப்பட்டனர். ஆனால் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்த கும்பல் ஒலிபெருக்கி வைக்கவிடாமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென இந்து அமைப்பினர் காவல்துறையினருக்கு புகார் அனுப்பினர். இதையடுத்து போலீசார், தகராறில் ஈடுபட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் அந்த கும்பல் கலைந்து சென்றது. அதன் பின்னர் அங்கு திருவிழா அமைதியான முறையில் நடந்தது.

தொடர்ந்து அங்கு பதட்டம் ஏற்படாமல் இருக்க அதிரடிப்படைகள் குவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News