உள்ளூர் செய்திகள்
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் நாளை மின்தடை
- சாஸ்தான்கோவில் பீடரில் மின்கம்பிகள் மாற்றும் பணிகள் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
- பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
களியக்காவிளை, செப்.6-
குழித்துறை கோட்டத்துக்குட்பட்ட மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் சாஸ்தான்கோவில் பீடரில் மின்கம்பிகள் மாற்றும் பணிகள் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மார்த்தாண்டம் காந்தி மைதானம், சந்தை, பேருந்து நிலையம், ெரயில் நிலையம், மதிலகம், செக்குமூடு, வால்குளம் பகுதிகளிலும் அதைச் சார்ந்த கிராமங்களிலும் மின் விநியோகம் இருக்காது. இந்த நேரத்தில் மின் கம்பங்களுக்கும், மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் மற்றும் மரங்கள் அகற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.