உள்ளூர் செய்திகள்

விசைப்படகுகளில் பிடிபட்ட கிளி மீன்கள்

Published On 2023-08-03 07:49 GMT   |   Update On 2023-08-03 07:49 GMT
  • போதிய விலை இல்லாததால் மீனவர்கள் கவலை
  • 60 நாள் தடைக்கு பிறகு ஆழ்கடலுக்கு சென்று திரும்பியது

கன்னியாகுமரி

குமரி மேற்கு கடற்கரை யில் விதிக்கப்பட்ட 60 நாள் மீன் பிடி தடைக்காலம் ஜூலை 31-ந் தேதி நள்ளிர வுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து குளச்சல் கடல் பகுதியில் இருந்து கடந்த 1-ந் தேதி விசைப்படகுகள் மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றன.

ஆழ்கடல் பகுதியில் தான் கணவாய், இறால், புல்லன் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். இந்த மீன்கள் உணவுக்காக வெளியூர் மற்றும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது தவிர கிளி மீன்கள், செந்நவரை, நாக்கண்டம் போன்ற மீன்களும் கிடைக்கும். இந்த வகை மீன்களை பற்பசை தயாரிப்பு ஆலை மற்றும் மீன் எண்ணை ஆலைகளுக்கு வியாபாரிகள் வாங்கி செல்வர்.

ஆழ்கடல் பகுதிக்கு சென்ற படகுகளில் 3 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின. இந்த படகுகளில் கிளி மீன்கள் ஓரளவு கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து விற்பனை செய்தனர். 50 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி கிளி மீன்கள் தலா ரூ.2 ஆயிரத்துக்கு விலை போனது. இது முந்தைய காலம் ரூ.4 ஆயிரத்து 500 முதல் ரூ. 5 ஆயிரம் வரை விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது. மீன்களுக்கு போதிய விலை இல்லாததால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.

மேற்கு கடற்கரையில் 60 நாள் தடையை முன்னிட்டு மீன் ஆலைகள் இயங்கவில்லை. தற்போது தடை நீங்கி உள்ளதை அடுத்து இந்த ஆலைகள் மீண்டும் இயங்க தொடங்கிய பின் தான் மீன்களுக்கு போதிய விலை கிடைக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News