உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
குலசேகரம் அருகே விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை
- இவருக்கு கடன்தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே வெண்டலிகோடு புனையன்குழி பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 29), பெயிண்டர். இவருக்கு கடன்தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் விஷ்ணு கடந்த 4-ந் தேதி விஷம் குடித்துவிட்டு வீட்டில் படுத்து இருந்தார். வெகுநேரமாகியும் அவர் எழும்பாததால் தாயார் சென்று பார்த்தார். அப்போது விஷ்ணு மயங்கிய நிலையில் இருந்தார்.
உடனடியாக அவரை மீட்டு குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் விஷ்ணு பரிதாபமாக இறந்தார். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.