உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் அரசின் புகைப்பட கண்காட்சி

Published On 2023-09-06 07:11 GMT   |   Update On 2023-09-06 07:11 GMT
  • கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது.
  • புகைப்பட கண்காட்சிகனை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் தெரிந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

நாகர்கோவில், 

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பெதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சர்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது.

மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின் போது காலமானவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது. பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது. காலை உவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்தும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும் குமரி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற ஸ்ரீதர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சிகனை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

Tags:    

Similar News