உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

குமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது

Published On 2022-11-20 09:20 GMT   |   Update On 2022-11-20 09:20 GMT
  • 4 வாகனங்கள் மீட்பு
  • குற்றவாளியை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் பாராட்டு

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் ரெகு ராஜேஷ் . இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் முன்பு நிறுத்தி சென்றார். அதனை யாரோ திருடிச் சென்று விட்டனர்.

மேலும் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய எல்கைகுட்பட்ட பகுதி களிலும் இதேபோல் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தரவிட்டார்.இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு பகுதியை சேர்ந்த இசக்கி பாண்டி (வயது 24) என்பவரை பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் கைது செய்து விசாரணை நடத்தினார்.

இதில் பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அவன் வாகன திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவனிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டது.

குற்றவாளியை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் வெகுவாக பாராட்டினார்.

Tags:    

Similar News