உள்ளூர் செய்திகள்

குழித்துறை நகராட்சி சார்பில் நுண்ணுயிர் உரமாக்கும் மையம்சேர்மன் பொன்.ஆசை தம்பி திறந்து வைத்தார்

Published On 2023-10-07 15:37 IST   |   Update On 2023-10-07 15:37:00 IST
  • நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகள் மார்த்தாண்டம் மார்க்கெட் அருகே குவிக்கப்பட்டுள்ளது
  • மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்

நாக்கோவில் : குழித்துறை நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகள் மார்த்தாண்டம் மார்க்கெட் அருகே குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசியது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் மார்த்தாண்டம் கீழ்பம்மம் அருகே உள்ள உரக்கிடங்கில் மத்திய அரசின் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.34 லட்சம் ஒதுக்கீட்டில் நுண்ணுயிர் உரமாக்கும் மையம் அமைக்கப்பட்டது. குழித்துறை நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் இந்த மையத்திற்கு கொண்டுவரப்பட்டு 45 நாட்களில் உரமாக்கப்படுகிறது.

இந்த நுண்ணுயிர் உரமாக்கும் மையத்தை குழித்துறை நகராட்சி சேர்மன் பொன்.ஆசைத்தம்பி திறந்து வைத்தார். ஆணையாளர் ராமத் திலகம் முன்னிலை வகித்தார். துணை தலைவர் பிரவீன் ராஜா, கவுன்சிலர்கள் பிஜு, ரத்தினமணி, அருள்ராஜ், சர்தார் ஷா, சுகாதார ஆய்வாளர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Similar News