உள்ளூர் செய்திகள்
அஞ்சுகிராமம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
- காவல்கிணறிலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
- அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் :
அஞ்சுகிராமம் அருகே பொட்டல்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 50), கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு காவல்கிணறிலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
ரஸ்தாகாடு பைபாஸ் சாலையில் வந்து கொண்டி ருந்தபோது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி முருகன் பரிதா பமாக இறந்தார். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ணை நடத்தி வருகிறார்கள்.