குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் அமுதன்- மோனிஷா திருமணம்
- பிரேமலதா விஜயகாந்த் நடத்தி வைக்கிறார்
- காலை 10.30 மணிக்கு ராஜாக்கமங்கலம் அளத்தங்கரை சிவசக்தி மகாலில் நடக்கிறது
நாகர்கோவில் :
கொட்டாரம் அருகே உள்ள மந்தாரம்புதூரை சேர்ந்த தங்கசுவாமி- சுந்தரி தம்பதியின் மகன் அமுதன். இவர் குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர். இவருக்கும் சோட்டப்பணிக்கன் தேரிவிளையை சேர்ந்த துரை-வளர்மதி தம்ப தியரின் மகள் மோனிஷாவுக்கும் திருமணம் நிச்சியிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு ராஜாக்கமங்கலம் அளத்தங்கரை சிவசக்தி மகாலில் நடக்கிறது. திருமணத்தை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். நிகழ்ச்சியில் கட்சியின் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வவாகிகள் கலந்து கொள்கிறார்கள். மேலும் மாலை 6.30 மணிக்கு வழுக்கம்பாறை முத்தாரம்மன் திருமண மஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மணமகன் குடும்பத்தார் ரமேஷ், சிவகாமி, ரகு, அமிதா, அரவிந்த், சாந்தி மற்றும் குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள், உறவினர்கள் செய்து வருகிறார்கள்.