உள்ளூர் செய்திகள்

குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்களை நியமித்து சீரமைக்க வேண்டும்

Published On 2023-08-01 12:57 IST   |   Update On 2023-08-01 12:57:00 IST
  • நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
  • அம்மா உணவகம் கண்காணிக்கப்படும் என தலைவர் கூறினார்.

கன்னியாகுமரி :

குளச்சல் நகர்மன்ற சாதாரண கூட்டம் தலைவர் நசீர் தலைமையில் நடந்தது. துணை தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், நகராட்சி பொறியாளர் மணி, மேலாளர் சக்திகுமார், சுகாதார ஆய்வாளர் தங்கபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஆறுமுகராஜா பேசுகையில், குளச்சல் அரசு மருத்துமனையில் தேவையான மருத்துவர்கள் இல்லை. மருந்து தட்டுப்பா டும் உள்ளது. மருத்து வமனையை சீரமைக்க அனைத்து கவுன்சிலர்களும் மருத்துவமனையில் உள்ளிருப்பு செய்வோம் என்றார். தி.மு.க. கவுன்சிலர் ஷீலா ஜெயந்தியும், குளச்சல் மருத்துவமனையை சீரமைக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்த தலைவர் நசீர், தேவையான மருத்துவ உபகரணங்கள் கேட்டு எழுதி கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தி.மு.க. கவுன்சிலர் ரகீம் பேசுகையில், நகராட்சி நகரமைப்பு ஆய்வாளருக்கு தன் பணி குறித்து அடிப்படை தெரியவில்லை. நகராட்சி ஆக்கிரமிப்புக்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்றார். உடனே தலைவர், உரிய நடவடிக்கை எடுக்கும்போது கவுன்சி லர்கள் சிபாரிசுக்கு வரக்கூ டாது என்றார்.

சுயேச்சை கவுன்சிலர் அன்வர் சதாத் பேசுகையில், சிலர் தெருக்களையே ஆக்கிரமித்து வைத்துள்ளனர் என குற்றம் சாட்டினர். அம்மா உணவகத்திலிருந்து பார்சல் வாங்கி சிலர் வெளியே விற்பனை செய்வ தாக காங்கிரஸ் உறுப்பினர் ரமேஷ் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அம்மா உணவகம் கண்காணிக்கப்படும் என தலைவர் கூறினார்.

கூட்டத்தில் கவுன்சி லர்கள் பணிக்குருசு, ஜான் சன், ஜான் பிரிட்டோ, நசீர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Tags:    

Similar News