உள்ளூர் செய்திகள்

 ஜாய் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜாய் ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது எடுத்த படம் 

ஜாய் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

Published On 2022-10-15 16:05 IST   |   Update On 2022-10-15 16:05:00 IST
  • டிசம்பர் முதல் வாரம் திறப்பு
  • முதற்கட்டமாக 9 துறைகளின் கீழ் 100 டிகிரிகள் வழங்கப்படவுள்ளது.

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் ஜாய் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜாய் ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது தந்தை கடந்த 37 வருடங்களுக்கு முன்னர் பள்ளிகள், பொறி யியல், பார்மசி, பல் மருத்துவ கல்லூரிகளை தொடங்கினார். எங்கள் கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்கள் உலகமெங்கும் உள்ள பெரிய நிறுவனங்களில் நல்ல பணிகளில் உள்ளனர்.

இதன் அடுத்த கட்டமாக, வடக்கன்குளம் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் சிறந்த கட்டிடங்களுடன் ஜாய் பல்கலைக்கழகம் உல களாவிய தரத்துடன் தயாராகியுள்ளது. அதன் இறுதி கட்ட பணிகள் முடிவடையும் நிலை யில் உள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் மத்திய, மாநில அமைச்சர்கள் பல்கலைகழகத்தை திறந்து வைக்கவுள்ளனர்.

இந்த பல்கலைக்கழகத்தில் முதற்கட்டமாக 9 துறை களின் கீழ் 100 டிகிரிகள் வழங்கப்படவுள்ளது. இதற்கான அட்மிஷன் தற்போது நடைபெற்று வருகிறது. இதன்மூலம் தமிழகத் தின் சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் கிடைக்கும் தரமான கல்வி நமது கன்னியாகு மரி, நெல்லை, தூத்துக்குடி மாணவர்களுக்கும் எளிதாக கிடைக்கும்.

இந்த பல்கலைக்கழகத்தில் ஐஐடி, என்ஐடி, பிர்லா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் முடித்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் இங்கு வந்து கல்வி பெற அனுமதி உள்ளது. இப் பல்கலைக்கழகத்தில் 100 இடங்களில் 35 இடம் என்ற விகிதத்தில் தமிழக மாணவர்களுக்கு வழங்கப்படும்.

இதுபோல் வெளி நாட்டில் உள்ள பல்கலைக்க ழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். அதன் படி 3 வருடம் நமது பல் கலைக்கழகத்திலும், ஒரு வருடம் வெளி நாட்டு பல்கலைக் கழகத்திலும் கல்வி கற்கலாம். பிஎச்டி 25 இருக்கைகள் வழங்கப் பட்டுள்ளது. பின்னாட்களில் இதனை 100 இடங்களாக அதிகரிக்கவுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, துணைவேந்தர் ராஜேஷ், பதிவாளர் ஜோன்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News