உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

நாகர்கோவில் தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த ரூ.30 லட்சம் நகைகள் மாயம்

Published On 2022-11-08 15:29 IST   |   Update On 2022-11-08 15:29:00 IST
  • தலைமறைவான பெண் மேலாளரை தேடும் பணி தீவிரம்
  • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் வேப்பமூட்டில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று உள்ளது.

இந்த நிறுவனத்தில் குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் தங்களது நகைகளை அடகு வைத்து பணம் வாங்கியுள்ளார்கள்.

நகைகளை அடகு வைத்து பணம் வாங்கிய பொதுமக்கள் தங்களது நகைகளை மீட்க வரும்போது நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.இது தொடர்பாக அந்த வாடிக்கையாளர்கள் வங்கி மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அந்த வங்கியில் பணிபுரிந்த மேலா ளர் கடந்த சில நாட்களாக பணிக்கு வரவில்லை. நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள் வங்கியில் விசாரணை மேற்கொண்ட னர். அப்போது ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேல் அதிகாரிகள் கோட்டாறு போலீசில் புகார் செய்தனர்.இன்று காலை கோட்டார் போலீசார் நிதி நிறுவனத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது நிதி நிறுவனத்தில் வேலை பார்த்த மேலாளர் கடந்த ஒரு வாரமாக வங்கிக்கு வராமல் தலைமறைவானதால் அவர் நகைகளை எடுத்துச் சென்று இருக்கலாம் என தெரிகிறது.அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

வாடிக்கையாளர்களி டமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டும் தங்களது கணக்கில் பணத்தை செலுத்தாமல் உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் செட்டிகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News