வரத்து அதிகரிப்பு தக்காளி விலை ரூ.70 ஆக குறைந்தது
- தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது
- தக்காளி விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
நாகர்கோவில் :
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி, இஞ்சி, மிளகாய்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளிலும் தக்காளி கிலோ ரூ.180 வரை விற்பனையானது.
தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ரேஷன் கடைகள் மூலமாகவும் தக்காளி விநியோகம் செய்யப்பட்டது. தக்காளியின் வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிக மாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தக்காளியின் விலை நாளுக்கு நாள் சரிய தொடங்கியுள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு ஏற்கனவே பெங்களூரில் இருந்து மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்து கொண்டிருந்தது. தற்போது குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், நெல்லை மாவட்டம் பணக்குடி, வள்ளியூர் பகுதி யில் இருந்தும் அதிகளவு தக்காளி அப்டா மார்க்கெட டில் விற்பனைக்கு வருகிறது. இதனால் தக்காளியின் விலை தினமும் குறைந்து வருகிறது.
நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.10 சரிந்து ரூ.70 ஆக குறைந் துள்ளது. மேலும் தக்காளி விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரி வித்துள்ள னர். தக்கா ளியின் வரத்து அதிகரிக்க தொடங்கியதால் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் இஞ்சி விலையும் குறைய தொடங்கியுள்ளது. ஒரு கிலோ இஞ்சி ரூ.300 வரை விற்கப்பட்டது. தற்போது ரூ.250 ஆக சரிந்துள்ளது. புதிதாக வரக்கூடிய இஞ்சி கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை ஆகிறது. இதேபோல் சிறிய வெங்காயத்தின் விலையும் சரிய தொடங்கியுள்ளது. கிலோ ரூ.120 வரை விற்கப்பட்ட சிறிய வெங்காயம் இன்று ரூ.90 ஆக குறைந்துள்ளது.
இதேபோல் அனைத்து காய்கறிகளையும் விலை குறைந்துள்ளது. நாகர்கோ வில் மார்க்கெட்டில் விற்ப னையான காய்கறிகளின் விலை விபரம் வருமாறு:-
கேரட் ரூ.70, பீன்ஸ் ரூ.80, மிளகாய் ரூ.60, சேனை ரூ.65, வெள்ளரிக்காய் ரூ.20, புடலங்காய் ரூ.30, தடியங்காய் ரூ.40, பூசணிக்காய் ரூ.30, கத்திரிக்காய் ரூ.50, வழுதலங்காய் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.30, சவ்சவ் ரூ.40, பீட்ரூட் ரூ.40, உள்ளி ரூ.90, பல்லாரி ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.30 விற்பனையானது.