உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் அரசுத் துறை வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்

Published On 2023-05-09 09:13 GMT   |   Update On 2023-05-09 09:13 GMT
  • 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்க வேண்டும்,
  • அடுத்த கட்டமாக 15-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்

நாகர்கோவில் :

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்க குமரி மாவட்ட நிர்வாகிகள் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம் இன்று நடந்தது.

புதிய வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்க வேண்டும், அனைத்து துறைகளிலும் உள்ள ஓட்டுனர் காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்துடன் நிரப்ப வேண்டும்.

ஓட்டுனர்களுக்கு தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தம் அமல்படுத்த வேண்டும், கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

இதுபற்றி சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, "எங்கள் சங்கத்தில் சுமார் 150 பேர் உள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் மட்டும் 35 பேர் பணியாற்றுகிறார்கள். இவர்கள் அனைவருமே கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினார்கள். எங்கள் கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டம் நடந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக 15-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதன்பிறகு 22-ந்தேதி மாநில அளவில் கோட்டையை நோக்கி பேரணி நடக்கிறது" என்றனர்.

Tags:    

Similar News