உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 9 மாதங்களில் 47 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2023-09-12 12:25 IST   |   Update On 2023-09-12 12:25:00 IST
  • அரசு டாஸ்மாக் கடையில் கடந்த 15 வருடமாக சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறா
  • 9 மாதங்களில் 47 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்

குளச்சல் :

குளச்சல் அருகே உள்ள இரும்பிலி பொட்டல் கரையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 53).

இவர் குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பு அரசு டாஸ்மாக் கடையில் கடந்த 15 வருடமாக சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார். ஜூலை மாதம் 8-ந்தேதி இரவு கோபால கிருஷ்ணன் வழக்கம்போல் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார். வீடு அருகே பாதையில் செல்லும்போது அங்கு இருளில் பதுங்கி யிருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவர் மீது பாய்ந்து அரிவாளால் வெட்டி பணத்தை பறிக்க முயற்சித்தார்.

ஆனால் ேகாபால கிருஷ்ணன் பணப்பையை இறுக பற்றிக் கொண்டதால், மர்மநபர் ஏமாற்றத்துடன் தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவத்தில் கோபால கிருஷ்ணனுக்கு வலது கைவிரல் துண்டானது.

இது தொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் ஊழியரை வெட்டியதாக மேற்கு நெய்யூர் சரலை சேர்ந்த அருண் சஜு (30) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் இரணியல் கோர்ட்டில் ஆஜர் டுத்தப்பட்டு நாகர் கோவில் சிறையில் அடைக் கப்பட்டார்.

இந்த நிலையில் அருண் சஜுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தர விட்டார். இதையடுத்து குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, அருண் சஜு மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய் தார்.

குமரி மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களில் 47 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News