உள்ளூர் செய்திகள்

குழித்துறையில் பழுதான சாலைகளை சீரமைக்காவிட்டால் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன் - நகரசபை தலைவர் பொன். ஆசைதம்பி ஆவேசம்

Published On 2022-08-18 09:51 GMT   |   Update On 2022-08-18 09:51 GMT
  • அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. விபத்துக்களை தடுக்கவும்,
  • முதல் கட்டமாக சத்தியாகிரக போராட்டம் நடத்துகிறோம். இதற்கு உடனே தீர்வு காணவில்லை என்றால் 10 நாட்களுக்குள் பொது மக்களுடன் சேர்ந்து அனைத்து கட்சி சார்பில் மறியல் போராட்டம்

கன்னியாகுமரி :

குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ. 36 கோடி செலவில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த பணி குறிப்பிட்ட நாள் கடந்த பிறகும் நிறைவடையவில்லை. இதனால் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. விபத்துக்களை தடுக்கவும்,

குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளையும் உடனே சீரமைத்து தர கேட்டு வெட்டு மணி நகராட்சி அலுவலகம் முன் கவுன்சிலர்கள் சார்பில் நேற்று சத்யாகிரகம் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு குழித்துறை நகராட்சி தலைவர் பொன்.ஆசைத்தம்பி தலைமை தாங்கி, பேசியதாவது:-

குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக அனைத்து ரோடுகளும் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் உடைக்கப்பட்டு குழாய் பதிக்கும் பணி நடந்தது.குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகும் பணியை நிறைவு செய்யவில்லை.இதனால் ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய்களும் சேதம் அடைந்து ரோடுகளும் குண்டும் குழியுமாக சிதைந்து காணப்படுகிறது.

இது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம்.ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ள வில்லை. செல்போனில் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டால் எடுப்ப தில்லை.இதனால் வேறு வழியில்லாமல் அனைத்து கவுன்சிலர்களும் சேர்ந்து கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம்.

உடனே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பேசுவதாகவும் கூறினார்.ஆனால் அதன் பிறகும் பணிகள் முறையாக நடைபெறவில்லை.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழித்துறை நகராட்சி பகுதியில் அடிப்படை வசதி எதுவும் செய்யக்கூடாது என்று கருதுகிறார்கள்.

இதனால் நாங்கள் முதல் கட்டமாக சத்தியாகிரக போராட்டம் நடத்துகிறோம். இதற்கு உடனே தீர்வு காணவில்லை என்றால் 10 நாட்களுக்குள் பொது மக்களுடன் சேர்ந்து அனைத்து கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்.

அதன் பிறகும் நிறைவு செய்யவில்லை என்றால் நான் குழித்துறை நகராட்சி மக்களுக்காக தீக்குளிக்கவும் தயங்க மாட்டேன் என்று கூறினார். இந்த சத்தியாகிரக போராட்டத்தில் துணைத் தலைவர் பிரபின் ராஜா, கவுன்சிலர்கள் விஜூ, ரெத்தினமணி, ஜெயந்தி, லலிதா, சர்தார்ஷா, ரீகன், அருள்ராஜ், ரோஸ்லெட் உட்பட கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News