உள்ளூர் செய்திகள்
- மாலை 3.30 மணிக்கு அன்புலிங்கம் வந்து பார்த்தபோது சரஸ்வதி தூக்கில் தொங்கி இறந்து கிடந்தார்.
- இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
ராஜாக்கமங்கலம் :
வெள்ளிச்சந்தை அருகே உள்ள சூரப்பள்ளத்தை சேர்ந்தவர் அன்பு லிங்கம். இவர் வீட்டு அருகில் தீப்பட்டி ஏஜென்சி தொழில் நடத்தி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 57). இவர் உடல் நலக்குறைவால் பல வருடங்களாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று அன்புலிங்கம் தொழில் விஷயமாக வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதி தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். மாலை 3.30 மணிக்கு அன்புலிங்கம் வந்து பார்த்தபோது சரஸ்வதி தூக்கில் தொங்கி இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அன்புலிங்கம் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். மணவாளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதன், இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.