உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

குமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

Published On 2022-10-29 14:45 IST   |   Update On 2022-10-29 14:45:00 IST
  • உள்ளாட்சி தினமான வருகிற 1-ந் தேதி நடக்கிறது
  • அனைத்துத் துறைகளின் அலுவலர்களும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

நாகர்கோவில்:

உள்ளாட்சி தினமான வருகிற 1-ந் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்க ளுக்கு உட்பட்ட 95 கிராம ஊராட்சி களிலும் 1-ந் தேதி பகல் 11 மணிக்கு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில், அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்து ரைக்கப்பட உள்ளது.அரசால் பல்வேறு துறை களின் மூலமாக செயல்ப டுத்தப்பட்டு வரும் திட்ட ங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்து ரைக்கவும், பொது மக்க ளுக்குத் தேவையான விவரங்களை அளித்திடவும் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற வேண்டும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர்அரவிந்த் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News