உள்ளூர் செய்திகள்

ரூ.1.45 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது

Published On 2023-10-10 12:56 IST   |   Update On 2023-10-10 12:56:00 IST
  • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
  • சிறப்பு மருத்துவ முகாம்களில் 1,041 மாற்றுத்திறனாளி

நாகர்கோவில் :

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மாற்றுத்திற னாளிகளும் மற்ற நபர்களுக்கு இணையாக அனைத்து வகையிலும் வலுபெற வேண்டுமென்று தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக் கான இலவச பேருந்து பயணச்சலுகை, பார்வையற்ற மாற்றுத்திற னாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலு கை, அரசு பஸ்சில் மாற்றுத் திறனாளிகளுக்கான 75 விழுக்காடு இலவச பஸ் பயணச்சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக் கான சிறப்பு சக்கர நாற்காலி, காதொலி கருவி, கருப்பு கண்ணாடி, மடக்கு ஊன்று கோல் மற்றும் பிரெய்லி கை கடிகாரம், நவீன செயற்கை அவயம், செயற்கை அவயம், முட நீக்கு சாதனம் (காலிபர்), ஊன்றுகோல், கை, கால் பாதிக்கப்பட்டவருக்கான திருமண உதவித்தொகை, பார்வையற்றவருக்கான திருமண உதவித்தொகை, செவித்திறன் குறைவுடை யோருக்கான திருமண உதவித்தொகை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக் கான திருமண உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் நல வாரிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத் திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக் கான நடமாடும் சிகிச்சை பிரிவு போன்றவற்றை செயல்படுத்தி வருகிறது.

கன்னியாகுமரி மாவட் டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2022 மற்றும் 2023 ஆண்டு வரை 31 பயனாளி களுக்கு ரூ.2 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால்களும், 55 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திர மும், 60 பயனாளிகளுக்கு செவித்திறன் கருவியும், 20 பயனாளிகளுக்கு 3 சக்கர நாற்காலியும், 8 பயனாளி களுக்கு ரூ.8 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப் பட்டோருக்கான நாற்காலியும் வழங்கப்பட்டது.

60 பயனாளிகளுக்கு ஆக்சிலரி ஊன்றுகோல், 60 பயனாளிகளுக்கு கருப்பு கண்ணாடியும், 30 பயனாளி களுக்கு ரூ.3 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலியும், 120 பயனாளிகளுக்கு பிரதி பலிக்கும் மடக்கு குச்சிகளும், 60 பயனாளிகளுக்கு துணை ஊன்றுகோல்களும், 30 பயனாளிகளுக்கு பிரெய்லி கைகடிகாரமும், 40 பயனாளிகளுக்கு எல்போ ஊன்றுகோல்களும், 300 பயனாளிகளுக்கு ரூ.39 லட்சத்து மதிப்பிலான திறன் ேபசிகளும் வழங்கப்பட்டது.

30 பயனாளிகளுக்கு நடைபயிற்சி சாதனங்களும், 6 பயனாளிகளுக்கு கோர்னர் இருக்கைகளும், 58 பயனாளி களுக்கு ரூ.48 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 17 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பி லான முதுகு தண்டுவடம் பாதிக்கப் பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலியும், 80 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பி லான சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டுள்ளது.

26 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான ஆவாஸ், 5 பயனாளிகளுக்கு ஸ்மாட் கேனும், 5 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் மாற்றுத்திறனாளி வாசிப்பாளர்களுக்கான உதவித்தொகை என ஆக மொத்தம் 1,041 பயனாளி களுக்கு ரூ.1.45 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு மாற்றுதிறனாகளின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மாற்றுத்திற னாளிகளும் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

Tags:    

Similar News