உள்ளூர் செய்திகள்

தக்கலை ஒன்றிய பகுதியில் 153 ஊர்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

Published On 2022-09-05 07:09 GMT   |   Update On 2022-09-05 07:09 GMT
  • சங்கரன்காவு பகுதியில் 7 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை
  • ஊர்வலம் வைகுண்டபுரம் ஸ்ரீ ராமர் ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கியது.

கன்னியாகுமரி:

தக்கலை ஒன்றியம் பத்மநாபபுரம் நகரம் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி அன்று 153 ஊர்களில் விநாயகர் சிலைகள் பூஜையில் வைக்கப்பட்டது.

இந்த சிலைகள் குமாரபுரம், விலவூர், கோத நல்லூர், சடையமங்கலம், திருவிதாங்கோடு, இரணியல், முளகு மூடு, திக்கணங்கோடு,வாழ்வச்ச கோஷ்டம், மருதூர்குறிச்சி, கல்குறிச்சி, முத்தல குறிச்சி, கப்பியறை ஆகிய உள்ளாட்சி பகுதிகளில் உள்ள ஊர்களில் வைக்கப்பட்டிருந்தது. திருவிதாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட சங்கரன்காவு பகுதியில் 7 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை பூஜையில் வைக்கப்பட்டிருந்தது.

நேற்று ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் பூஜையில் வைக்கப்பட்டி ருந்த அனைத்து விநாயகர் சிலைகளும் அலங்கரிக்கப் பட்ட வாகனங்களில் ஏற்றி ஊர்வலமாக வைகுண்டபுரம் ஸ்ரீ ராமர் ஆலய வளாகம் கொண்டுவரப்பட்டது.

அங்கு தொடங்கிய ஊர்வலமானது மணலி, மேட்டுக்கடை , தக்கலை பழைய பஸ் நிலையம் , கல்குறிச்சி , இரணியல், திங்கள் சந்தை , லட்சுமிபுரம் வழி மண்டைக்காடு கடற்க ரையை வந்து அடைந்தது. பாதுகாப்பு பணியில் இன்ஸ்பெக்டர் நெப்போலியன், சுதேசன் உட்பட ஏராளமான போலீ சார் பங்கேற்று இருந்தனர். தொடர்ந்து அனைத்து விநாயகர் சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டது.

Tags:    

Similar News