உள்ளூர் செய்திகள்

மூளையில் கட்டுப்படுத்த இயலாத ரத்தக்கசிவால் கிம்ஸ் மருத்துவமனை சிகிச்சையால் உயிர்பிழைத்த மூதாட்டி

Published On 2023-08-20 12:25 IST   |   Update On 2023-08-20 12:25:00 IST
  • மூளைக்கு உட்புறத்தில் அதிகரித்த அழுத்தம் ஏற்படுவதற்கு அது வழிவகுக்கும்
  • மருத்துவர்கள் குழு தீவிரமாக செயல்பட்டு உரிய சிகிச்சை அளித்தனர்

கன்னியாகுமரி :

திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனைக்கு தொடர்ந்து விடாப்பிடியான தீவிர தலைவலி மற்றும் குமட்டல் பாதிப்போடு 70 வயது மூதாட்டி வந்தார். அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சோதனை செய்த போது மூளைக்கு மற்றும் அதனை பாதுகாக்கும சவ்வு மென்படலத்திற்கும் இடையே உள்ள வலையனைமிடை வெளியில் ரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

மூளையை சுற்றியுள்ள மூளை முதுகுத்தண்டு நீரில் ரத்தம் சேருமானால், மூளைக்கு உட்புறத்தில் அதிகரித்த அழுத்தம் ஏற்படுவதற்கு அது வழிவகுக்கும். இதன் மூலம் ேநாயாளியின் உடல்நிலையானது உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்றுவிடும்.

அவருக்கு கிம்ஸ்ெஹல்த்தின் நரம்பியல் இடையீட்டு கதிர்வீச்சியல் நிபுணரான டாக்டர் சந்தோஷ் ேஜாஸப் தலைமையிலான மருத்துவர்கள் குழு தீவிரமாக செயல்பட்டு உரிய சிகிச்சை அளித்தனர். இதன் மூலம் மூதாட்டி உயிர் பிழைத்தார்.

வயது முதிர்ந்த மூதாட்டிக்கு ஏற்பட்டிருந்த உயிருக்கு ஆபத்தான ரத்தக்கசிவை நிறுத்தி குணமளித்திருக்கிற மூளை நரம்பியல் இடையீட்டு கதிர்வீச்சியல் துறையின் சிறப்பு நிபுணர் டாக்டர் மணீஷ் குமார் யாதவ், இணை சிறப்பு நிபுணர் டாக்டர் தினேஷ் பாபு மற்றும் நரம்பியல் உணர்விழப்பு மருந்தியல் துறையின் இணை சிறப்பு நிபுணர் டாக்டர் ெஜயந்த் ஆர் சேஷன், டாக்டர் சந்ேதாஷ் ேஜாஸப் ஆகியோருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News