உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் ஆட்டோவில் 9 கல்லூரி மாணவிகளை ஏற்றி வந்த டிரைவருக்கு அபராதம்

Published On 2023-08-03 07:46 GMT   |   Update On 2023-08-03 07:46 GMT
  • போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை
  • 2-வது முறையாக ஆட்டோ டிரைவர் சிக்கியதால் அவருக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.

நாகர்கோவில் :

நாகர்கோவிலில் போக்குவரத்து விதிமுறை களை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். குறிப்பாக ஆட்டோக்களில் அதிக அளவு பயணிகளை ஏற்றி வருபவர்களுக்கும் பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிய ஆட்டோ டிரைவர்க ளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இன்று காலையில் நாகர்கோவில் பகுதியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் செல் லச்சாமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அதிக மாணவிகள் இருந்தது தெரியவந்தது.

மாணவிகள் ஒவ்வொரு வரும் மடியில் இருந்தவாறு பயணம் செய்தனர். ஒரே ஆட்டோவில் 9 கல்லூரி மாணவிகள் இருந்தனர். 3 பேர் பயணம் செய்ய வேண்டிய ஆட்டோவில் 9 பேர் பயணம் செய்ததையடுத்து ஆட்டோ டிரைவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

ஏற்கனவே இவருக்கு அதிக மாணவிகளை ஏற்றி வந்ததாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. 2-வது முறையாக ஆட்டோ டிரைவர் சிக்கியதால் அவருக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் நாகர்கோ வில் நகர் முழுவதும் ஹெல்மெட் சோதனை யிலும் போலீசார் ஈடுபட்ட னர். மணிமேடை, வடசேரி, கோட்டார் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை களில் ஹெல்ெமட் அணி யாமல் வந்த வாகன ஓட்டிகளை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

பெண்களும் இந்த சோதனையில் சிக்கினார்கள். இன்று சுமார் 50-க்கும் மேற்பட்டவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் நோ பார்க்கிங் கில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News