கோப்பு படம்
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனுக்கு கொலை மிரட்டல்
- சி.சி.டி.வி. ஆதாரத்துடன் போலீசில் புகார்
- சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை
நாகர்கோவில்:
நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன்.
இவர், புத்தேரி அருகே சக்தி கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று மாலை நாஞ்சில் முருகேசன் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த 2 வாலிபர்கள் நாஞ்சில் முருகேசனிடம் அவரது மகன் சிவா எங்கே என்று கேட்டனர். அப்போது அவர் மகன் வெளியே சென்று இருப்பதாக கூறினார்.
உடனே அந்த வாலிபர்கள் சிவா எங்களிடம் பணம் வாங்கி உள்ளார். வாங்கிய பணத்தை திருப்பி தர வில்லை. பணத்தை உடனே திருப்பி தர வேண்டும் என்று கூறி நாஞ்சில் முருகேசனிடம் கேட்டனர். அப்போது நாஞ்சில் முருகேசனை கொன்று விடுவதாகவும் அந்த வாலிபர்கள் மிரட்டி னார்கள்.
இதையடுத்து நாஞ்சில் முருகேசனின் கார் டிரைவர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர்.உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இது குறித்து நாஞ்சில் முருகேசன் வடசேரி போலீசில் புகார் செய்தார்.
புகாரில் தன்னை கொன்று விடுவதாக மிரட் டிய வாலிபர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். எனக்கும் எனது மகன் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் வாலிபர்கள் நாஞ்சில் முருகேசனை மிரட்டுவது போன்ற சி.சி.டி.வி. ஆதாரத்தையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
போலீசார் அந்த சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை வைத்து நாஞ்சில் முருகேசனை மிரட்டியது யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.