உள்ளூர் செய்திகள்

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண்ணுக்கு கொரோனா

Update: 2022-06-28 06:11 GMT
  • புதிதாக 43 பேருக்கு தொற்று
  • பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது.

முதலில் மேற்கு மாவட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது நாகர்கோவில் நகரப் பகுதியிலும் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 25 நாட்களில் 549 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரித்து வருவ தையடுத்து மாவட்டம் முழுவதும் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரி கள் நடவடிக்கை மேற்கொ ண்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 906 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. அதில் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 17 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள் ஆவார்கள். பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பெண் குழந்தைகளும் அடங்கும். சமீபகால மாக பெண்களே அதிகமாக கொரோனாவால் பாதிக்க ப்பட்டு வருகிறார்கள்.

நாகர்கோவில் மாநகர பகுதியில் 13 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவ மாணவர்கள் 3 பேர் ெகாேரானாவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது.அங்கு 8 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்தி ரியில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் ஒருவருக்கு கடந்த வாரம் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கொரோனா சோதனை மேற் கொள்ள ப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் அவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவரை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். தற்போது அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கொேரானாவை கட்டுப்படுத்தும் வகை யில் முகக்கவசம் சோத னையை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதி காரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து அரசு அலுவலகங்களுக்கு பணிக்கு வந்தவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். பொதுமக்கள் கொரோ னாவை கட்டுப்படுத்தும் வகையில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்து ள்ளார்.

Tags:    

Similar News