உள்ளூர் செய்திகள்

தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு தங்கு தடையின்றி கற்கள் கிடைக்க நடவடிக்கை கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

Published On 2023-10-27 10:03 GMT   |   Update On 2023-10-27 10:03 GMT
  • தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு தங்கு தடையின்றி கற்கள் கிடைக்க நடவடிக்கை கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
  • தற்பொழுது அந்த துறைமுகத்தில் பணிகள் நடைபெறவில்லை. இதனால் மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட் டுள்ளது.

நாகர்கோவில் : தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு தங்கு தடையின்றி கற்கள் கிடைக்க நடவடிக்கை கலெக்டர் ஸ்ரீதர் தகவல் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மீனவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார்.இதைத்தொடர்ந்து மீனவர்கள் கூறியதாவது:- தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகம் 15 மீனவ கிராமத்தில் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டது. தற்பொழுது அந்த துறைமுகத்தில் பணிகள் நடைபெறவில்லை. இதனால் மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட் டுள்ளது.

மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு வெளியே மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே உடனடியாக தேங்காய்பட்டினம் துறைமுக பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய்பட்டினம் துறை முகத்தில் உள்ள தனியார் ஐஸ் பிளான்ட்டிற்கு மீன்வளத்துறை அதிகாரிகள் கட்டணம் செலுத்தியுள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய் பட்டினம் துறைமுகத்தில் உள்ள மணல் திட்டுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு அனைத்து மீனவர்களும் தொழில் செய்ய வழிவகை செய்ய வேண்டும். மீனவர்களுக்கு வழங்கப்படுகிற மானிய விலை மண்எண்ணையை தகுதியான அனைத்து மீனவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

இதற்கு பதில் அளித்து கலெக்டர் ஸ்ரீதர் பேசியதா வது:-

தேங்காய்பட்டினம் துறைமுக பணிகள் தொடர்பாக கண்காணிக்க 15 கிராமங்களை சேர்ந்த உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மாதத்திற்கு 2 முறை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கல் பிரச்சினை இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள குவாரி உரிமையாளர்களை அழைத்துபேசி கூடுதலாக கற்கள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கற்கள் அதிகமாக கொண்டு வரப்படும்போது பணிகள் விரைவாக முடிக்கப்படும். தகுதியான நபர்களுக்கு மானிய விலை மண்எண்ணை வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.

மீன்வளத்துறை அதிகாரி கூறுகையில், தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் செயல் பட்டு வந்த தனியார் ஐஸ் பிளான்ட்டிற்கு கரண்ட் பில் கட்டியதை சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட ரூ.5 லட்சம் வசூல் செய்யப்பட் டுள்ளது. கடந்த 3 மாதமாக மின்சாரம் துண்டிக்கப்பட் டுள்ள நிலையில் தற்போது மீண்டும் அவர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.5 லட்சம் வசூல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். கூட்டத்தில் ஒரு சில மீனவர்கள் மட்டுமே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இதற்கு சில மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கோரிக்கையை மனுக்களை முதலில் பெற்றுவிட்டு அது தொடர்பான பதில்களை பேசிவிட்டு விவாதத்தை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். இதனால் இரு தரப்பு மீனவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.


Tags:    

Similar News