உள்ளூர் செய்திகள்

குளச்சல் அருகே கார் கண்ணாடி, சி.சி.டி.வி. கேமிரா உடைப்பு - 4 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2022-06-19 09:24 GMT   |   Update On 2022-06-19 09:24 GMT
  • மது அருந்துவதற்கு பணம் கேட்டதாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு
  • படுகாயமடைந்தவர்களுக்கு குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

கன்னியாகுமரி:

குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் சரல்விளையை சேர்ந்தவர் அருமைநாயகம்.இவரது மகன் சேகர் (வயது 37). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.விடுமுறையில் கடந்த மாதம் ஊருக்கு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் சேகர் மற்றும் அவரது உறவினர் அஜயன் (32) ஆகியோர் பைக்கில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினர். வீட்டுக்கு செல்லும் வழியில் அதே பகுதியை சேர்ந்த இன்பராஜ் (34), அஜித்ராம் (34), பிரதீப் (32), ஸ்டாலின் (31) ஆகியோர் காரை நிறுத்தியிருந்தனர்.இதை பார்த்த சேகர், காரை வழிவிட்டு நிறுத்துமாறு கூறினார்.

அப்போது 4 பேரும் மது அருந்துவதற்கு சேகரிடம் பணம் கேட்டதாக கூறப்ப டுகிறது. இதற்கு சேகர் மறுத்தார். இது சம்பந்தமாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஆனது.பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.கலைந்து சென்ற 4 பேரும் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து சேகரின் வீட்டு காம்பவுண்டுக்குள் புகுந்து கார் கண்ணாடி மற்றும் சி.சி.டி. கேமராக்களை அடித்து உடைத்தனர். இதை தடுத்த சேகர் மற்றும் உறவினர் அஜயன் ஆகியோரை அவர்கள் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றனர்.

படுகாயமடைந்த இருவரும் குளச்சல் அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறிப்பாக குளச்சல் போலீசார் மேற்கூறிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News