உள்ளூர் செய்திகள்

பி.எஸ்.என்.எல். 4 ஜி சேவை கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2023-06-14 06:27 GMT   |   Update On 2023-06-14 06:27 GMT
  • விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
  • கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 4 ஜி சேவைகள், மக்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவல கத்தில் வைத்து பி.எஸ்.என்.எல். தொலைபேசி தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. துணை பொதுமேலாளர் எழில் சைமன் வரவேற்றார். பொது மேலாளர் பிஜு பிரதாப் அறிமுக உரை யாற்றினார். துணை பொது மேலாளர் விஜயன் விளக்க உரையாற்றினார்.

கூட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி. பேசியதாவது:-

பி.எஸ்.என்.எல்/ சிம் கார்டு விற்பனை அதிகரித்து உள்ளது பாராட்டுக்குரியது. வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வெளியேற காரணமான குறைகளை அறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். பி.எஸ்.என்.எல் சிக்னல் குறைவாக உள்ளதால், பலர் வேறு இணைப்புகளுக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இவற்றை விரைவில் நிவர்த்தி செய்ய வேண்டும்.

இந்த வருட இறுதிக்குள் அதிக அலைவரிசை கோபுரங்கள் அமைத்து கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 4 ஜி சேவைகள், மக்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் உறுப்பி னர்கள் பகவதி பெருமாள், பால்ராஜ், அன்பழகன், ஆரோக்கிய ராஜன், சஹானா, துரை, அந்தோணி ராஜேஷ், காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் மற்றும் பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News