உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பிரச்சார வாகனம்

Published On 2022-08-03 09:13 GMT   |   Update On 2022-08-03 09:13 GMT
  • கலெக்டர் அரவிந்த் இன்று தொடங்கி வைத்தார்
  • பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் மட்டுமே சரி விகிதத்தில் அமைந்துள்ளன

நாகர்கோவில்:

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் இன்று தொடங்கியது.

மாவட்ட கலெக்டர் அரவிந்த் கொடியசைத்து வாகன பயணத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 1 முதல் 7 - ம் தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் உலகம் முழுவ தும் தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தொடங்கிய தாய்ப்பால் விழிப்புணர்வு வாகனம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்க ளுக்கும் சென்று பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யில் நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வரு கிறது. பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் தேவை யான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் மட்டுமே சரி விகிதத்தில் அமைந்துள்ளன என்றார்.

முன்னதாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களால் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து உணவு வகைகள் குறித்த கண்காட்சி மற்றும் கோலக் கண்காட்சியினை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா , வன அலுவலர் இளையராஜா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் சரோஜினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News