உள்ளூர் செய்திகள்

ராஜாக்கமங்கலம் உப்பளத்தில் மீன் சந்தையை ஆக்கிரமிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்

Published On 2023-09-26 12:01 IST   |   Update On 2023-09-26 12:01:00 IST
  • மாவட்ட கலெக்டருக்கு ஊராட்சி மன்றம் கோரிக்கை
  • உப்பளமானது ஏற்கனவே மத்திய அரசுக்கு சொந்தமானது.

ராஜாக்கமங்கலம் :

ராஜாக்கமங்கலம் உப்பளத்தில் கடந்த 30 வருடங்களாக மீன் சந்தை இயங்கி வருகிறது. இதில் அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் மீன் மற்றும் காய்கறிகள் இதர பொருட் களை வாங்கி செல்வது வழக்கம். கடந்த 2 நாட்க ளுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த ஒரு சிலர் அது தங்களுடைய சொத்து என்று ஆக்கிரமித்து அங்கு யாரும் செல்லக்கூடாது என ரோட்டோரத்தில் கால்வாய் தோண்டியுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இந்த மீன் சந்தையில் வியாபாரம் செய்வதற்கு வசதியாக கடந்த 2012-13-ம் நிதி ஆண்டில் அப்போ தைய எம்.எல்.ஏ. முருகேசன் தொகுதி வளர்ச்சி திட் டத்தின் கீழ் ரூ.2.52 லட்சம் மதிப்பில் கொட்டகை அமைத்து அதில் அப்பகுதி மக்கள் வியாபாரம் செய்து வருகின்ற னர். அந்த உப்பளமானது ஏற்கனவே மத்திய அரசுக்கு சொந்தமானது.

அதனை 99 வருட குத்தகைக்கு ஒரு சிலருக்கு அரசு கொடுத்தது. குத்தகை காலமும் முடிந்து தற்போது குத்தகையையும் கொடுக்கவில்லை. இதை திடீரென இவ்வாறு ஆக்கிரமித்ததால் ஊராட்சி சார்பில் அங்கு தோண்டப்பட்ட குழிகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் மண்ணை நிரப்பி மீண்டும் அப்பகுதியில் வியாபாரம் நடக்கும் படி ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார் செய்துள்ளார். மேலும் மீண்டும் அரசு நிலத்தை ஆக்கிரமிக்காமல் இருக்கும் வண்ணம் தகுந்த நடவடிக்கை எடுத்திட மாவட்ட கலெக்டருக்கு ஊராட்சி மன்றம் சார்பில் அவர் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

Tags:    

Similar News