உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழியில் அ.தி.மு.க. பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2023-10-30 12:30 IST   |   Update On 2023-10-30 12:30:00 IST
  • தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமையில் நடந்தது
  • இளம்பெண் இளைஞர் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆரல்வாய்மொழி :

தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக ஆரல்வாய்மொழி தனியார் மண்டபத்தில் பூத் நிர்வாகிகள் இளம்பெண் இளைஞர் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவரும், தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளருமான முத்துக்குமார் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. மேலிடப்பார்வையாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி கலந்துகொண்டு பேசியதாவது:-

ஏழை, எளிய மக்களின் நலம்காக்க பாடுபட்ட இயக்கம் அ.தி.மு.க.. ஆனால் தி.மு.க. அரசு மக்களை வஞ்சித்து வருகிறது. தேர்தல் வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றுகிற தி.மு.க. அரசை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் அட்சய கண்ணன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி கிருஷ்ணதாஸ், ஆரல்வாய்மொழி நகர செயலாளர் சுடலையாண்டி, தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பரமேஸ்வரன், ஆரல் வாய்மொழி பேரூராட்சி மன்ற துணை தலைவர் சுதா பாலகிருஷ்ணன், தாழக்குடி பேரூராட்சி மன்ற உறுப்பினர் ரோகினி அய்யப்பன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர் நவமணி, மோகன் வள்ளி யம்மாள் கிளை கழக நிர்வாகிகள் துணை செல்வன், கச்சேரி நாக ராஜன், சிவசங்கரன், இணை செயலாளர் பேச்சி யம்மாள், அமுதா உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News