உள்ளூர் செய்திகள்

மருத்துவ மாணவி மர்மச் சாவு குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும்

Published On 2023-10-09 13:17 IST   |   Update On 2023-10-09 13:17:00 IST
  • கலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க. மனு
  • 5 ஆண்டுகளில் சுமார் 10 மருத்துவ மாணவ-மாணவிகள் மர்மமாக இறந்துள்ளனர்.

நாகர்கோவில் :

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி என்ற அரிகரன் தலைமையில் கட்சியினர், நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்துள்ளனர். அதில், குலசேகரம் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவி சுகிர்தா தற்கொலைக்கு காரணமானவர்களை காப்பாற்றவும் குற்றத்தை மூடி மறைக்கவும் கல்லூரி நிர்வாகம் முயல்கிறது. இந்த விஷயத்தில் குலசேகரம் போலீஸ் விசாரணையும் நம்பும் படி இல்லை என மாணவியின் உறவினர்களும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர். இங்கு கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 10 மருத்துவ மாணவ-மாணவிகள் மர்மமாக இறந்துள்ளனர்.

மேலும் கல்லூரி நிர்வாகம் தங்கள் செல்வாக்கால், மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோர் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News