கோப்பு படம்
குளச்சல் அருகே பெண்ணிடம் பறித்த செயினை வீட்டருகே வீசி விட்டு சென்ற மர்ம நபர்
- சங்கிலியை பறித்த.உடன் பெண் கூச்சல் போட்டதால் செயினை பறித்த மர்ம நபர் தப்பி ஓடி விட்டார்.
- போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே அஞ்சாலியை சேர்ந்தவர் சுஜின்குமார். இவரது மனைவி ராதிகா (வயது 31). கோணங்காட்டில் ஆலய திருவிழா நடந்து வருகிறது. ராதிகா ஆலய விழாவிற்கு சென்றார். ஆலய வழிபாடு முடிந்து இரவு அவர் வீடு திரும்பினார்.
ராதிகா வீட்டு முன் வரும்போது மர்ம நபர் ஒருவர் ராதிகாவின் கழுத்தில் கிடந்த 13 பவுன் தாலி சங்கிலியை பறித்தான்.உடனே ராதிகா கூச்சல் போட்டார். இதனால் மர்ம நபர் தப்பி ஓடி விட்டான். இது குறித்து ராதிகா குளச்சல் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பறிக்கப்பட்ட செயின் வீட்டின் அருகே கிடந்தது. இதனை போலீசார் கண்டு பிடித்து மீட்டனர். போலீஸ் வருவதை அறிந்த மர்ம நபர் பயந்து செயினை வீசிவிட்டு சென்றாரா? அல்லது ராதிகாவிடமிருந்து செயினை பறிக்கும்போது அவர் சத்தமிட்டதால் மர்ம நபர் தப்பும்போது தவறி கீழே விழுந்ததா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.