உள்ளூர் செய்திகள்

களியக்காவிளை அருகே ஓட்டலுக்குள் புகுந்து தாக்கிய கும்பல்; பொருட்களை சூறையாடியதால் பதட்டம்

Published On 2023-07-18 12:45 IST   |   Update On 2023-07-18 12:45:00 IST
  • 5 வருட ஓப்பந்த அடிப்படையில் ஓட்டல் நடத்தி வருகிறார்
  • குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கன்னியாகுமரி :

களியக்காவிளை அருகே உள்ள செறுவாரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் அன்சாத். இவர் அந்த பகுதியில் கடந்த 3 வருடங்களாக கனகராஜ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 5 வருட ஓப்பந்த அடிப்படையில் ஓட்டல் நடத்தி வருகிறார். தகராறு

இந்த நிலையில் 3 வருடங்கள் முடிந்ததும் கனகராஜ், கூடுதல் பணம் வேண்டும் இல்லை யென்றால் ஓட்டலை காலி செய்ய வேண்டும் என்று அன்சாத்திடம் கூறினாராம். இது தொடர்பாக அவர் களுக்குள் தகராறு ஏற்பட்டு களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டது. மேலும் குழித்துறை கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், அன்சாத் 5 வருடம் கடை நடத்தலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அன்சாத் ஓட்டலை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று ஒரு கும்பல் ஓட்டலுக்குள் திடீரென புகுந்துள்ளது. அவர்கள் அங்கிருந்த பொருட்களை சூறை யாடியதோடு, உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதலும் நடத்தியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் திரண்டதால் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்த தாக்குதலில் ஓட்டல் ஊழியர் அப்துல் சலாம் படுகாயமடைந்தார். அவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்டது யார்? தாக்கு தலுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News