உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

திருவனந்தபுரத்தில் கொலை செய்யப்பட்டவர் சின்னமுட்டத்தை சேர்ந்த மீனவர்

Published On 2022-10-22 07:50 GMT   |   Update On 2022-10-22 07:51 GMT
  • கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
  • போலீசார் தொடர்ந்து விசாரணை

நாகர்கோவில்:

திருவனந்தபுரம் முட்டை தரை பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி குப்பை கிடங்கில் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் 2 கால்கள் கிடந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் சங்கு முகம் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். 2 கால்களையும் கைப்பற்றி உடல் பாகங்கள் எங்கே என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர் பாக நாகர்கோவில் பட்டகா சாலியன் விளையைச் சேர்ந்த ரமேஷ் (வயது 25) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த நண்பர் ஒருவரை கொலை செய்து உடல்பாகங்களை திருவனந்தபுரம் பகுதியில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

கைது செய்யப்பட்ட ரமேஷ் மீது குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் ராஜாக்கமங்கலம், கோட்டார், போலீஸ் நிலை யங்களில் வழக்கு உள்ளது. கைது செய்யப்பட்ட ரமேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

ரமேஷ் கொலை செய்ததாக கூறப்பட்ட அவரது நண்பர் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர். ரமேஷ் கூறிய அவரது நண்பர் கடந்த இரண்டு மாதங்களாக மாயமாய் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.எனவே கொலை செய் யப்பட்டது அவரது நண்பர் சின்னமுட்டத்தைச் சேர்ந்த பீட்டர் கனிஷ்கர் (வயது 27) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

போலீசாரிடம் ரமேஷ் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்ப தாவது:-

எனது தந்தை மணிகண்டன் கேரளாவில் வசித்து வருகிறார். என் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. போலீசார் என்னை வழக்கு தொடர்பாக தேடினால் உடனே நான் கேரளாவிற்கு சென்று விடுவேன். சின்ன முட்டத்தைச் சேர்ந்த பீட்டர் கனிஷ்கர் எனது நண்பர் ஆவார். அவர் மீன்பிடிப்பதற்காக கேரளாவிற்கு வந்திருந்தார்.

சம்பவத்தன்று நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொலை செய்தேன். பின்னர் கொலையை மறைக்க திட்டம் தீட்டினேன். துணி யால் அவரது உடலை மூடி வைத்திருந்தேன். பின்னர் அங்குள்ள இறைச்சி கடைக்காரர் ஒருவர் உதவியுடன் பீட்டர் கனிஷ்கர் உடலை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசினேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறி னார்.

இருப்பினும் போலீசார் கொலை செய்யப்பட்டது பீட்டர் கனிஷ்கர் என்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இதற்காக டி.என்.ஏ. பரிசோதனை செய்யவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதில் கொலை செய்யப்பட்டது யார் என்பது இறுதி முடிவு செய்யப்படும்.

பீட்டர் கனிஷ்கர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது.

Tags:    

Similar News