குளச்சல் வைத்தியரிடம் நகை பறித்த 4 பேர் கைது
- தலைமறைவான கொள்ளையனை பிடிக்க 2 தனிப்படை
- கைதான அரசு ஊழியர் சஸ்பெண்டு
கன்னியாகுமரி :
குளச்சல் அருகே பெத்தேல் புரம் படுவாக்க ரை பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 71). இவர் செம்பன் விளை- திக்க ணங்கோடு சாலையில் நாட்டு மருத்துவ வைத்திய சாலை நடத்தி வருகிறார். கடந்த 24-ந் தேதி வைத்தியசாலைக்கு வந்த ஒருவர் வைத்தியர் ஜார்ஜின் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து ஜார்ஜ் குளச்சல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.அப்போது வைத்தியரிடம் நகை பறித்த கொள்ளை யனின் உருவம் சிக்கியது. மேலும் அவர் வெளியே தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வது போன்ற காட்சியும் பதிவாகி இருந்தது.
அதை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் கொடுப்பைகுழி பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படி யாக நின்ற 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்த போது வைத்தியர் ஜார்ஜிடம் திருடியதை ஒப்புக்கொண்ட னர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்த னர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய போதுபிடிப்பட்ட வர்கள் நட்டாலம் பொற்றைவிளை பகுதியை சேர்ந்த அபிஷேக்( 22 )சாந்தபுரத்தைச் சேர்ந்த சுபின் (19 )கொடுப்பை குழியை சேர்ந்த சிவசங்கு( 53 )அவரது மகன் ஜோதி (29) என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த வழக்கில் சிவசங்குவின் மற்றொரு மகன் சிவா என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட அபிஷேக் ராஜாக்கமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்துள்ளது .அவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் கருணை அடிப்ப டையில் அபிஷேகத்திற்கு வேலை கிடைத்துள்ளது. தற்பொழுது ஒரு வாரமாக அபிஷேக் விடுமுறையில் உள்ளார். இந்த நிலையில் அவரது நண்பருடன் சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டு சிக்கி கொண்டார். அபிஷேக் கைது செய் யப்பட்டதையடுத்து அவர் மீது துறை வாரியாக நடவ டிக்கை எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்ட னர்.
இதைதொடர்ந்து அபிஷேக்கை சஸ்பெண்ட் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிவசங்கு ஜோதி மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கொள்ளை வழக்கில் கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.