உள்ளூர் செய்திகள்

கீழவண்ணான்விளை வேங்கை நற்பணி மன்றத்தின் 36-வது ஆண்டு விழா மற்றும் தீபாவளி தின விழா

Published On 2023-11-13 15:51 IST   |   Update On 2023-11-13 15:51:00 IST
  • கீழவண்ணான்விளை வேங்கை நற்பணி மன்றத்தின் 36-வது ஆண்டு விழா மற்றும் தீபாவளி தின விழா மன்ற வளாகத்தில் கொண்டா டப்பட்டது
  • எஸ்.சுயம்புலிங்கம் தலைமையில் செண்டை மேளம் முழங்க சிலம்பாட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே உள்ள கீழவண்ணான்விளை வேங்கை நற்பணி மன்றத்தின் 36-வது ஆண்டு விழா மற்றும் தீபாவளி தின விழா மன்ற வளாகத்தில் கொண்டாடப்பட்டது. எஸ்.சுயம்புலிங்கம் தலைமையில் செண்டை மேளம் முழங்க சிலம்பாட்டம் நடைபெற்றது.

நேற்று ஆலடி விநாயகருக்கு சிறப்பு வழிபாடும் மற்றும் சிறுவர், பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பேச்சு போட்டி மற்றும் வினாடி-வினா போட்டியும், இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டம் மற்றும் பரிசு வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு கீழவண்ணாவிளை ஊர் தலைவர் டி.சுந்தரேசன் தலைமை தாங்கினார். வேங்கை நற்பணி மன்றத்தின் இணை செயலாளர் சிவசுந்தர் வரவேற்றார். துணை தலை வர் எம்.குமார் மன்ற ஆண்ட றிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களாக பா.ஜ.க. பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி யின் 50-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஜவான் அய்யப்பன், மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி யின் 46-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வீரசூரபெருமாள் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

கீழவண்ணான் விளையை சேர்ந்த ஆர்.அன்பையா, சி.சுயம்பு ராஜன், வேங்கை நற்பணி மன்றத்தின் தலைவர் டி.ராஜாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேங்கை நற்பணி மன்றத்தின் செயலாளர் ஐ. ஆனந்த் நன்றி கூறினார். பல்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடு களை வேங்கை நற்பணி மன்ற நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும், மன்ற உறுப்பினர்களும், ஊர் பொதுமக்களும் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News