உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயிலில் வந்த 2600 டன் அரிசி

Published On 2023-08-23 08:46 GMT   |   Update On 2023-08-23 08:46 GMT
  • லாரிகள் மூலம் கிட்டங்கிகளுக்கு ரேஷன் அரிசி கொண்டு செல்லப்பட்டது
  • அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் சப்ளை செய்யப்படும் அரிசி, வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் சரக்கு ரெயில் மூலமாக கொண்டு வரப்படுகிறது.

ஆந்திராவில் இருந்து இன்று 42 வேகன்களில் 2600 டன் ரேசன் அரிசி நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு ரெயிலில் வந்த ரேசன் அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து லாரிகளில் ஏற்றினார்கள்.

பின்னர் லாரிகள் மூலம் கிட்டங்கிகளுக்கு ரேஷன் அரிசி கொண்டு செல்லப்பட்டது. கிட்டங்கிகளில் இருந்து அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News