உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2 அதி நவீன படகுகளையும் உடனே இயக்க வேண்டும் - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2022-11-27 07:31 GMT   |   Update On 2022-11-27 07:31 GMT
  • ற்றுலா பயணிகள் பார்வையிடுவற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • ரூ.8 கோடியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அதிநவீன 2 படகுகள் வாங்கப்பட்டு பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக் கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி சட்ட மன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்ட பம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராள மான சுற்றுலா பயணி கள் வருவதால் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக

ரூ.8 கோடியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அதிநவீன 2 படகுகள் வாங்கப்பட்டு பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக் கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த படகுகள் சுற்றுலா பயணி களுக்கு பயன்படுத்தப்ப டாமலேயே தி.மு.க. ஆட்சி யில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையை மாற்றி சுற்றுலா பயணிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வாங்கப்பட்டது என்ற காரணத்தினை கருத்தில் கொண்டு, தி.மு.க. அரசு படகுகளை இயக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை மிகவும் சிரமத்துக்கு ஆளாக்கி உள்ளது.

சுற்றுலா பயணிகள் பயன்பெறும் விதத்தில் உடனடியாக நிறுத்தி வைக்கப்ப ட்டுள்ள 2அதிநவீன படகு களையும் உடனடியாக இயக்கிட வேண்டும். கன்னியாகுமரி சுற்றுலா வளர்ச்சி அடை வதற்கு இந்த படகு சேவை ஒரு மைல் கல்லாக அமையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News