உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழியில் பெண் போலீஸ் மகனிடம் 2 பவுன் நகை பறிப்பு

Published On 2022-06-07 08:51 GMT   |   Update On 2022-06-07 08:51 GMT
  • மேலும் ஒரு பெண்ணின் 5 பவுன் மாயம் - திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ 50 ஆயிரம் ஆகும்.
  • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்:

மங்கலகுண்று, திருஞானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் சோபி தராஜ். இவரது மனைவி மீனா (வயது 30), இவர் நாகர்கோவில் ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று மீனா தனது மகன் பிரிஷ்டன் ஹன்ஷித்துடன் ஆரல்வாய்மொழியில் தேவசகா யம் மவுண்ட்டில் நடந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் கொடுத்ததற்கான நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார்.

பின்னர் மீனா வீட்டுக்கு செல்வதற்காக புறப்பட்டார். அப்போது அவரது மகன் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை காணவில்லை. நகையை தேடி பார்த்தும் கிடைக்காததால் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்சிங் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மணவாளக்குறிச்சி சின்னவிளையைச் சேர்ந்தவர் கேத்தரினம்மாள் (வயது 70). இவரும் தேவசகாயம் நன்றி அறிவிப்பு திருப்பலி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தேவசகாயம் மவுண்ட்டிற்கு வந்து இருந்தார். பின்னர் நிகழ்ச்சி முடிந்த பிறகு பஸ் ஏறுவதற்காக நின்றபோது அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை காணவில்லை. திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ 50 ஆயிரம் ஆகும்.

இது குறித்து ஆரல்வாய்மொழி போலீ சில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News