உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் அருகே இந்து தமிழர் கட்சி நிர்வாகி காரில் கல்வீசிய 2 பேர் கைது

Published On 2023-08-22 07:12 GMT   |   Update On 2023-08-22 07:12 GMT
  • மேலும் 3 பேருக்கு வலைவீச்சு
  • சி.சி.டி.வி. கேமராவின் பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இரணியல் :

நாகர்கோவில் அருகே உள்ள களியங்காட்டை சேர்ந்தவர் ஈசான சிவம் என்ற ராஜா (வயது 33). இவர் இந்து தமிழர் கட்சி யின் மாநில பொறுப்பாளராக இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு ஈசான சிவம் வெளியே சென்று விட்டு தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். நள்ளிரவு ஒரு கும்பல் அவரது கார் மீது கற்களை வீசி உடைத்ததுடன் வீட்டையும் சேதப்படுத்தியது. இதுகு றித்து ஈசான சிவம் இரணி யல் போலீசில் புகார் செய்தார். வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி. கேமராவின் பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் ஈசான சிவத்தி ற்கும் நாகர்கோவில் பகுதி யைச் சேர்ந்த ஜெபின் என்பவ ருக்கும் இடையே மோட்டார் சைக்கிள் வாங்கியது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த விரோ தத்தில் ஜெபின் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஈசானசிவத்தின் காரை கல்வீசி தாக்கி யிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜெபின் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற் கிடையில் சுசீந்திரத்தைச் சேர்ந்த சங்கர், முன்னப்பன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரு வரும் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தப் பப்பட்டு ஜெயிலில் அடைக் கப்பட்டனர். தலை மறைவாக உள்ள மற்ற 3 பேரை போலீ சார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News