உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த குருசடியை படத்தில் காணலாம்

ஈத்தாமொழி அருகே மிக்கேல் அதி தூதர் ஆலயத்தில் 12 பவுன் நகை கொள்ளை

Published On 2022-11-15 14:00 IST   |   Update On 2022-11-15 14:00:00 IST
  • மர்மநபர்கள் கைவரிசை
  • சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு

நாகர்கோவில்:

ஈத்தாமொழி அருகே கேசவன் புத்தன் துறை பகுதியில் தூய மாசற்ற திரு இருதய அன்னை ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்தின் எதிர்ப்புறம் மிக்கேல் அதிதூதர் குருசடி ஆலயம் அமைந்துள்ளது.

இந்த குருசடியில் காலை மாலை நேரங்களில் பிரார்த்தனை நடைபெறும். நேற்று காலை வழக்கம் போல் பிரார்த்தனை முடிந்து அனைவரும் சென்றனர். மாலையில் பிரார்த்தனைக்கு வந்த போது குருசடி இருந்த மிக்கேல் அதிதூதர் கழுத்தில் கிடந்த 12 பவுன் நகை மாயமாக இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் ஈத்தாமொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தன.ர் கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி னார்கள். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

கொள்ளை நடந்த பகுதியிலிருந்து மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து ஈத்தாமொழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்கள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு யாரோ இந்த கைவரிசையில் ஈடுபட் டுள்ளனர்‌. எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்க ளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கி றார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News