உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கறவைமாடு, சாகுபடி பணிகளுக்கு ரூ.2200 கோடி கடன் வழங்க இலக்கு

Published On 2022-06-16 09:10 GMT   |   Update On 2022-06-16 09:10 GMT
  • குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பயிர்க்கடன் ரூ 400 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
  • தட்டுப்பாடின்றி விவசாயத்துக்கும் தேவையான யூரியா உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழுவதும் விவசாயிகள் தற்போது சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயத்திற்கு தேவையான உரம் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை பறக்கை, அழகப்பபுரம் பகுதியில் யூரியா உரம் தட்டுப்பாடு உள்ளது. தட்டுப்பாடின்றி விவசாயத்துக்கும் தேவையான யூரியா உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிருக்கு குறிப்பிட்ட காலத்தில் உரம் இட்டால் மட்டுமே அதிக மகசூல் பெற முடியும். ஆனால் ஒரு ஏக்கருக்கு 45 கிலோ யூரியா தேவைப்படுகிறது.

ஆனால் 15 ஏக்கருக்கு 100 கிலோ யூரியா உரத்தை தான் வழங்குகிறார்கள். மேலும் கூட்டுறவு சங்கங்களில் லோன் வாங்குபவர்களுக்கு அதிக அளவில்யூரியா வழங்கப்படுகிறது விவ சாயிகளுக்கு யூரியா உரம் வழங்கப்படவில்லை. கூட்டுறவு சங்கங்களில் யூரியா ரூ. 270க்கு விற்கப்படு கிறது. ஆனால் வெளி மார்க்கெட்டில் ரூ 400 க்கு விற்கப்பட்டு வருகிறது என்றனர்.

கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சந்திரசேகர் கூறுகையில்

குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பயிர்க்கடன் ரூ 400 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

அதில் ரூ 395 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ 440 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள விவாசாயிகள் அனைவரும் கடனுதவி பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் நகைக்கடன் கறவை மாடுகள் உள்பட அனைத்து வகையான கடன்களுக்கும் ரூ.2200 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 300 டன் யூரியா உரம் இருப்பில் உள்ளது. வருகிற 20-ந் தேதி மேலும் 600 டன் யூரியா உரம் கொண்டுவரப்படவுள்ளது

வடக்கு தாமரைகுளம் மயிலாடி குமாரபுரம் தோப்பூர் ஊட்டுவாழ்மடம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் யூரியா உரம் இருப்பு உள்ளது. தேவைப்படுபவர்களுக்கு யூரியா உரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதை தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் அரவிந்த் பெற்றுக்கொண்டார்.

Tags:    

Similar News