உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பாபநாச தீர்த்த குளத்தில் தூய்மை பணி தீவிரம்

Published On 2023-10-09 06:39 GMT   |   Update On 2023-10-09 06:41 GMT
  • அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பார்வையிட்டார்
  • பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் எடுத்து அப்புறப்படுத்தும் பணி நடந்தது

நாகர்கோவில் :

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சன்னதி தெரு பாபநாச தீர்த்த குளம் பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் குப்பை, செடி, மரம் வளர்ந்து பராமரிப்பின்றி காட்சி அளித்து வந்தது. இந்த தீர்த்த குளம் தூய்மை செய்யும் பணிகள் கடந்த சில நாட்கள் முன்பு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

தற்போது தீர்த்த குளம் நீரை மோட்டார் வைத்து எடுத்து வெளியேற்றி பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் எடுத்து அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இப்பணிகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பார்வையிட்டார். மேலும் அந்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

மகாதேவர் அய்யர் குழுவினர் உழவார பணிகளை செய்து வருகின்றனர். அப்போது கோவில் மேலாளர் ஆனந்த், கணக்காளர் கண்ணதாசன் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News