உள்ளூர் செய்திகள்

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை

Published On 2023-10-04 07:49 GMT   |   Update On 2023-10-04 07:49 GMT
  • அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.
  • வாழை விவசாயிகளும், ரப்பர் விவசாயிகளும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.

நாகர்கோவில்:

விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் எதிர்பாராதவிதமாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் விவசாயிகள் தங்கள் பயிர்களை இழந்து தவிக்கின்றனர். அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. நெற்பயிர் அறுவடை நடந்து கொண்டிருந்தபோது இந்த மழை பெய்துள்ளதால் முழுமை யான அறுவடை செய்ய முடியாமல் பயிர்களை விவசாயிகள் இழந்துள்ளனர்.

அதனை போன்று வாழை விவசாயிகளும், ரப்பர் விவசாயிகளும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். வேளாண் துறை அதிகாரி கள் நேரில் சென்று ஆய்வு செய்து சேத விபரங்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.மத்திய, மாநில அரசுகள் இந்த விவசாயிகளுக்கு தேவையான இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News